ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்தமாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜித் மாஸ் லுக்கில் காணப்படும் அந்த போஸ்டரில் ‘God Bless u Mamae’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.