சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய், நடிகர் சல்மான் கானை கொல்ல கூலிப்படையினருக்கு ரூ.25 லட்சம் கொடுத்ததாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், துப்பாக்கி வாங்கிக் கொடுத்த 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில், இது திட்டமிடப்பட்ட சதி என்பது தெரியவந்துள்ளது.