தூத்துக்குடி சிவன் கோவில் அருகே உள்ள ஒரு திரையரங்கில் நேற்று இரவு நடிகர் தனுஷ் நடித்த ராயன் படத்தை பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் 6 பேர் வந்துள்ளனர். இவர்கள் குடிபோதையில் இருந்ததால், தியேட்டருக்குள் அனுமதிக்க மேலாளர் சதீஷ்குமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.