பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். விக்ரமை முதன்முதலில் சந்திக்க கொஞ்சம் பயமாக இருந்ததெனக் கூறிய அவர், ஸ்டார் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் அனைவரிடமும் நட்பாக பழகுவதோடு, சக பணியாளர்களுக்கு இறங்கிவந்து உதவுகிறார் எனத் தெரிவித்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் ஆக.15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.