காமராஜ் வேல் இயக்கத்தில் வெற்றி நடிக்கும் “அதர்ம கதைகள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்யும் வெற்றி, இப்படத்தில் சிறுமிகளின் கடத்தல் விவகாரத்தை கையில் எடுத்து, சோஷியல் மெசேஜை சொல்ல விரும்புகிறார். இப்படத்தில் மறைந்த நடிகர் பூ ராமு, அம்மு அபிராமி, சாக்ஷி அகர்வால், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.