ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த நடிகை ரோஜா கேலோ இந்தியா போட்டி நடத்துவதற்காக ஒதுக்கிய ரூபாய் 100 கோடி நிதியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் இந்த ஊழல் குறித்து விசாரிக்க சிபிசிஐடியிடம் புகார் அளித்துள்ளதாகவும், ரோஜா விரைவில் கைதாகி சிறைக்கு செல்வது உறுதி, அவர் செய்த ஊழல் விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என தெலுங்கு தேசம் கட்சியின் ரவி நாயுடு தெரிவித்துள்ளார்.