பெண்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து எம்எல்ஏ மற்றும் எம்பி ஆக்கி இருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியில் தான் பெண் மீதான இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது. அதுவும் அவரின் கட்சியை சேர்ந்தவர் நடு ரோட்டில் இளம் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் ஒருவர் மற்றும் இளைஞரை நபர் ஒருவர் நடுரோட்டில் கடுமையாக தாக்குகின்றார். அந்தப் பெண் நடத்தை சரியில்லை என்பதால் இந்த தாக்குதல் நடத்தியதாக அந்த நபர் விளக்கம் அளித்துள்ள நிலையில் இதற்கு மம்தா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.