தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சுமார் 15 தெரு நாய்கள் ஒரு பெண்ணை கடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொண்ட போது நாய்கள் விடாமல் கடித்த நிலையில் தன்னுடைய செருப்பைக் கொண்டு தடுத்து அந்த பெண் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு நாய்களுக்கு உணவு வழங்குவதை குடியிருப்பு வாசிகள் தவிர்க்க வேண்டும் என்று அந்த பெண்ணின் கணவர் வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.