மக்களவை தேர்தல் நடந்த சமயத்தில் நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் முதல்முறையாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகியுள்ளார். ஏற்கனவே பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் மற்றும் நயினார் நாகேந்திரனின் டிரைவர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.