தமிழ் சினிமாவில் சிறு சிறு ரோலில் நடித்து பிரபலமானவர் தான் யோகி பாபு. தற்போது அவர் இல்லாத படமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவர் தனது திறமையின் மூலம் வளர்ந்துள்ளார். கதாநாயகனாகவும் சில படங்களில் (கூர்கா மண்டேலா உள்ளிட்ட படங்கள்) நடித்துள்ளார்.
இந்நிலையில், நலிவடைந்த நடிகர்களுக்கு உதவும் வகையில், நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர் பூச்சி முருகனிடம் ரூ 6 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார் யோகி பாபு. இவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.