நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும். கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எந்த மது மதி மறக்கச் செய்கிறதோ அதே மதுதான் மரிக்கச் செய்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், இறப்பின் காரணம் எதுவாயின் இரங்கத்தான் வேண்டும், சாராயச் சாவுகளுக்காகவல்ல சந்ததிகளுக்காக எனவும் தனது பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.