சென்னை ராயபுரத்தில் நள்ளிரவில் அதிமுக தேநீர் பந்தலை அரசு அகற்றிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். ராயப்பேட்டையில் அமைக்கப்பட்ட தேநீர் பந்தல் சிறிய புல்டோசர் மூலம் அகற்றப்பட்ட வீடியோவை எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அவர், இது ஒன்றை அகற்றி விட்டதால் அவ்வளவு தான் என்று திமுக அரசு எண்ண வேண்டாம். இனி அடுத்தடுத்து திறக்கப்படும் எனக் கூறியுள்ளார்.