ராமநாதபுரத்தில் நவாஸ் கனி வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை எதிர்த்து பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிட்டு, 1,66,782 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார். இந்நிலையில், நவாஸ் கனி தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை எனக் கோரி வழக்குத் தொடுத்துள்ளார்.