நாகை அரசு மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் நாகை அரசு மருத்துவமனையை ஒரத்தூர் மருத்துவ கல்லூரிக்கு மாற்றியதை நீக்க வேண்டும் நாகை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே இருந்த அனைத்து சேவைகளும் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக செயல்பட்டு வந்த நாகப்பட்டினம் மாவட்ட தலைமை மருத்துவமனையை நாகப்பட்டினம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 4 லட்சம் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒரத்தூர் மருத்துவர் கல்லூரிக்கு மாற்றி இருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையிலேயே ஏற்கனவே இருந்த அனைத்து விதமான மருத்துவ சேவைகளும், தரமான கட்டமைப்புடன் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக அரசை தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.


