நானும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நண்பர்கள் என ரியல் மாட்ரிட் அணி வீரர் கிலியன் எம்பாப்பே தெரிவித்துள்ளார். தனது கனவு அணியான ரியல் மாட்ரிட் அணியில் இணைந்த பின் செய்தியாளார்கள் சந்திப்பில் எம்பாப்பே, நான் எனது சிறுவயதில் ரொனால்டோ போலாக வேண்டும் என விரும்பினேன். அதுதான் எனது கனவாக இருந்தது. அவர்தான் எப்போதும் எனது ஹீரோ. அவர் ஒரு நண்பனைப்போல எனக்கு அறிவுரைகளை வழங்குவார். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.