நாடாளுமன்றத்திலும் இந்தி திணிக்கப்படுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரியா சுலே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் பேசும் உறுப்பினர்களின் பேச்சை ஹிந்தி voice over-களை கொண்டு சன்சாத் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இந்தி பேசாத மாநிலங்களின் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பேச்சை தங்களின் சொந்த மொழிகளில் கேட்பதற்கான மக்களின் உரிமையை பறிக்கும் செயல் இது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.