மாநிலங்களவையில் காங்கிரஸ் பெண் எம்பி பூலோ தேவி நேதம் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் போராடியபோது அவர் மயங்கி விழுந்ததை அடுத்து, உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை மருத்துவர்கள் தற்போது பரிசோதனை செய்து வருகின்றனர்.