நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் நாடாளுமன்றம் மற்றும் டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கேரள எம்பிக்கள் சிவதாசன், ஏ.ஏ. ரஹீம் ஆகியோருக்கு, காலிஸ்தான் அமைப்பின் பெயரில் மிரட்டல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நாடாளுமன்றம், செங்கோட்டை உள்ளிட்ட டெல்லியின் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.