பிரபல டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமான jioவில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பயனர்கள் whatsapp, இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் போன்றவற்றை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். ட்ராக்கிங் வெப்சைட் டவுன் டிடெக்டரின் படி 54 சதவீதம் பேர் மொபைல் இன்டர்நெட்டில் பிரச்சனை இருப்பதாகவும், 38 சதவீதம் பேர் ஜியோ பைபர் குறித்தும், ஏழு சதவீதம் பேரு மொபைல் நெட்வொர்க் பிரச்சனைகள் தொடர்பாகவும் புகார் அளித்துள்ளனர்.