“மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சியானது வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். கடைசியாக, தேர்தலுக்கு முன்பாக தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததன் காரணமாக, “மனதின் குரல்” நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது தேர்தல் முடிந்து, மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ள நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், எளிய மக்களின் குரல்களை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசி வருகிறார்.