ஹைதராபாத்தில் இணை ஆணையராக பணியாற்றும் ஐ ஆர் எஸ் அதிகாரி அனுசியா ஆணாக மாறியுள்ளதால் தன் பெயரை அனுகதிர் சூர்யா என்று மாற்றிக் கொண்டுள்ளார். அவர் தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொண்டதை ஏற்று திருமதி அனுசியா என்பதற்கு பதில் திரு அனுகதிர் சூர்யா என்று அங்கீகரிக்கப்படுவார் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் சிவில் சர்வீசஸ் வரலாற்றில் பெண் அதிகாரி ஒருவர் ஆணாக மாறியது இதுவே முதல் முறையாகும்.