இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டுமென மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கு நிலுவை வரி இல்லை அல்லது நிலுவையில் உள்ள வரியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அந்த சான்றிதழ் உறுதிப்படுத்தும். இது தொடர்பான சட்டத் திருத்தம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.