நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தில் ‘அருவி’ பட நடிகை அதிதி பாலன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. ‘அடடே சுந்தரா’ பட இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள கேங்ஸ்டர் கதைக்களத்திலான இப்படத்தில் ‘பத்ரா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.