சிறப்பு வாய்ந்த இந்த அணியை வழிநடத்தியதில் நான் அதிர்ஷ்டசாலி. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக இறுதி ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. மும்பை ஒருபோதும் ஏமாற்றம் அளித்தது கிடையாது. ரசிகர்களின் வரவேற்பு மெய்சிலிர்க்க வைத்தது. இந்த உலகக்கோப்பை ஒட்டுமொத்த தேசத்திற்குரியது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.