தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படும் ‘நான் முதல்வன் திட்டம்’ மாணவர்களின் திறனை அதிகரிப்பதற்காக தகவல் தொடர்பு துறை, AI தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, டேட்டா இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், வங்கி மற்றும் நீதித்துறை போன்ற துறைகளிலும், வங்கிப் பணி, ஐஏஎஸ், ஐபிஎஸ், யுபிஎஸ்சி, கேட், சி.ஏ, மாநில மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குகிறது.