மனிதர்களுக்கு செல்லப் பிராணியான நாய்கள் மீது எப்போதும் ஒரு தனிப்பிரியம் உண்டு. மனிதர்களை போலவே நாய்களையும் தங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து வளர்த்து வருகிறார்கள். இதற்கு பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. பிரபல இந்தி நடிகரான மிதுன் சக்ரவர்த்தி, 116 நாய்களை பராமரிக்கிறார். மும்பை அருகேவுள்ள மத் தீவில் 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கி ₹45 கோடிக்கு 76 நாய்கள் சுதந்திரமாக வாழ பங்களா கட்டியுள்ளார். அவருக்கு, ஊட்டி பங்களா உள்பட சுமார் ₹400 கோடி மதிப்பு சொத்துக்கள் உள்ளன.