இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் நாய்கள் கடித்து 286 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாய் கடி தொடர்பாக 30,43,339 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் மத்திய கால்நடைத்துறை அமைச்சர் ராஜுவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். விலங்குகளால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு போதிய நிதி உதவி வழங்குவதாக கூறிய அவர், இந்த நிதியை ரேபிஸ் தடுப்பூசிக்கும் மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.