கடலூர் அருகே ஒரு மாத குழந்தையை தெரு நாய் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி அடுத்த கொடிக்களத்தில் தாய் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.