நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று கூறி, மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமதித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கள்ளச்சாராயத்தால் 65 பேர் பலியானதை மடைமாற்ற ஆர்.எஸ்.பாரதியை திமுக களமிறக்கியுள்ளதாக விமர்சித்த அவர், பொதுமக்களிடம் திமுகவுக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் இதே போன்று அவர் கீழ்த்தரமாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.