தமிழக சுகாதாரத் துறையானது நாய் மற்றும் பாம்பு கடிக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புர நல்வாழ்வு மையங்களில் 24 மணி நேரமும் நாய்க்கடி மற்றும் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பாம்பு கடிக்கு ஆளானவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி செய்யவு,ம் மருந்துகள் ஊசிகள் இருப்பில் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.