2024 மத்திய பட்ஜெட் நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சாமானிய மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல், கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட் என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையையும், முந்தைய பட்ஜெட்டையும் அப்படியே நகலெடுத்துள்ளதாகவும் குறை கூறினார். கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக சாடினார்.