ஜூலை 1 நாளை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டுக்கு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களே இரண்டாம் காலாண்டுக்கும் தொடரும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
*முதலாம் ஆண்டு டெபாசிட் – 6.9%
*2ம் ஆண்டு டெபாசிட் – 7%
*3ம் ஆண்டு டெபாசிட் – 7.1%
*5ம் ஆண்டு டெபாசிட் – 7.5%
*5 ஆண்டுகள் தொடர் வைப்பு நிதி(RD) – 6.7%
*மாதாந்திர வருமானத் திட்டம் – 7.4%
*பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்(PPF) – 7.1%
*கிசான் விகாஸ் பத்ரா – 7.5%
*மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – 8.2%
*செல்வமகள் சேமிப்பு திட்டம் – 8.2%