நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி டிசம்பர் 31 வரை வருமான வரி தாக்கல் செய்யலாம். ஆனால் அதை இலவசமாக செய்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் வரை மட்டுமே. ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் ஐந்தாயிரம் ரூபாயும், ஐந்து லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் வரி தொகைக்கு வட்டியும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.