மூன்றாவது முறையாக மோடி பிரதமரான பின் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை பகல் 11 மணிக்கு கூடுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர். அதன்பின், ஜூன் 26ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறவுள்ளது. ஜூன் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து, ஜூலை 2, 3 தேதிகளில் குடியரசுத் தலைவர் உரை மீது பிரதமர் பதிலளிக்கவுள்ளார்