பிஇ மற்றும் பி டெக் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க ஜூன் மாதத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நாளை https://www.tneaonline.org/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.