உத்தரப்பிரதேச மாநிலம், பிஹாரிபூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் பணியாற்றும் ராணி கங்வார் என்ற ஆசிரியை, சிறுவனை மரத்தில் ஏறி நாவல் பழங்கள் பறித்து தரச்சொல்லியுள்ளார்.
இதற்கு சிறுவன் மறுத்துள்ளார்.இதனால் 2 மணி நேரம் வகுப்பறைக்கு பூட்டி வைத்து அடித்துள்ளார். இதனால் சிறுவனின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட சிறுவனின் தாயார் போலீசில் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை மீது எஸ்.சி எஸ்.டி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.