கேரளாவில் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று மருந்து வரவுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடி மருந்து வழங்கப்படும். இங்கு 60 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிஃபா கண்டறியப்பட்ட மலப்புரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 10ஆம் தேதி முதல் சிறுவனுக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.