கேரளாவில் நிஃபா வைரஸ் பரவிவரும் சூழலில், மக்கள் விழிப்புடன் இருக்க தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.காய்கள், பழங்களை கழுவி சாப்பிடவும், குகை, கிணறுகள், இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல், தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் 21 நாள் தனிமையில் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வவ்வால் மூலம் நிஃபா வைரஸ் பரவுவது குறிப்பிடத்தக்கது.