ஆட்சி அதிகாரத்துக்காக மாநிலத்தின் விருப்பங்களில் நிதிஷ்குமார் சமரசம் செய்துள்ளதாக லாலு பிரசாத் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. எனவே, பாஜக உடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.