கேலோ இந்தியா போட்டிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக அமைச்சர் உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்துக்கு ரூ.25 கோடி வழங்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு ரூ.10 கோடி மட்டுமே வழங்கியுள்ளதாக விமர்சித்த அவர், கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.