தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி டிவி, கட்டில், மெத்தை உள்ளிட்டவற்றை வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அப்படி வாங்குவோர், தவணை பணத்தை கட்டி முடித்ததும் NOC சான்றிதழ் வாங்குவது அவசியமாகும். இல்லையெனில், பிற்காலத்தில் அது உங்களுக்கு பிரச்னையாக மாறக்கூடும். ஆம், தவணை கட்டவில்லையென அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்ப சாத்தியமுள்ளது. இதுபோல பிரச்னைகளை பலர் எதிர்கொண்டு வருகின்றனர்.