வயநாடு பேரழிவை போல இந்திய ராணுவம் இதற்கு முன் பார்த்ததில்லை என கேரள மேஜர் ஜெனரல் வினோத் மேத்யூ தெரிவித்துள்ளார். இந்தளவிற்கு பெரும் நிலப்பரப்பு மண்ணில் புதைந்தது இதுவரை வேறு எங்குமே நிகழ்ந்ததில்லை என்றும் கூறினார். புஞ்சிரி மட்டம், சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்கள் மண்ணில் புதைந்து விட்டதாகக் கூறிய அவர், பலியானவர்கள் எண்ணிக்கை நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கும் என்றார்.