கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும், 60 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை, நீலகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.