மே3 ஆம் தேதி சீனா அனுப்பிய சாங் இ-6 விண்கலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. அது, 1 கிலோ 935 கிராம் எடையுள்ள மண் மாதிரிகளை சேகரித்து கொண்டு வந்துள்ளதாக, சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிசுபிசுப்பு தன்மையுள்ள அந்த மாதிரிகளை பதப்படுத்தி, விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உள்ளனர். அதில், நிலவின் தோற்றம் மற்றும் அங்குள்ள கனிமங்கள் பற்றி, பல தகவல்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.