கரூரில் ₹100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், பிரவீண் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.