நிழல் முதல்வராக உதயநிதி செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்றார். மேலும், திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை எனவும், உதயநிதி, இன்பநிதி ஆகியோருக்கே முதல்வர் பதவி கிடைக்கும் எனவும் விமர்சித்தார்.