நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்திலிருந்து அதிகம் பேர் முதலிடம் உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளது. நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டி தேர்வு முடிவுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீது இன்று விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் கவுன்சிலிங்கிற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
மேலும் நீட் தேர்வு குறித்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். நீட் குளறுபடி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜூலை எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். நீட் குளறுபடி புகார்களால் தேர்வின் புனித தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது.