திருத்தப்பட்ட நீட் தரவரிசைப் பட்டியலில் 17 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்கள் இடத்தையும் பிடித்துள்ளனர். ரஜினிஷ் 720க்கு 720 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடமும், சையத் ஆரிபின் யூசுப் 715 மதிப்பெண்களுடன் 26ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். நீட் தேர்வு எழுதிய 1,52,920 தமிழக மாணவர்களில் 89,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.