நீட் தேர்வுக்கு எதிராக ஜூலை 3இல் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியும், மத்திய அரசைக்கண்டித்தும் சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, ஜூன் 24ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி விவகாரத்தால், ஒத்திவைக்கப்பட்டது.