நீட் தேர்வுக்கு எதிராக இன்று திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, ஜூன் 24ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி விவகாரம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.